2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மிருகப்பலி: பொறிமுறை முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

வருடாந்தம் நடத்தப்படும் மிருகப்பலி தொடர்பாக தமது சுயக்கட்டுப்பாட்டு பொறிமுறை தொடர்பான முன்மொழிவுகளை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவில் தர்மக்கர்த்தாக்கல் உயர்நீதிமன்றத்தில்  நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தனர்.

முன்னேஷ்வர பத்திரகாளியம்மன் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்கள் குழுமத்தில் நீதியரசர்களான பிரயசத தெப் மற்றும் சரத் டி அபறூ ஆகியோரும் இருந்தனர்.

விலங்கு பாதுகாப்பு செயற்பாட்டாளர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அறிவுறுத்தல் பெறுவதற்காக தவணை கேட்டார்.
ஜனாதிபதியின் சட்டத்தரணி ஏ.ஆர் சுரேந்திரன், தர்மகர்த்தாக்கள் சார்பில் சுய கட்டுப்பாட்டுக்கான ஆலோசனைகளை சமர்ப்பித்தார்.

அவையாவன:

•    திருவிழாவின் போது பக்தர்கள் கொண்டுவரும் விலங்குகளை வைத்திருப்பதற்கு மூடிய தடுப்பு கொட்டில் அமைக்கப்படும்.

•    மூன்று தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்படும். இந்த மூன்று கொட்டகைகளும் மூடிய தடுப்பு கொட்டிலுடன் மூடிய பாதை வழியாக இணைக்கப்படும்.

•    பலியிடுதலை பக்தர்கள் காணமுடியாதவாறு தடுப்புகள் இருக்கும்.

•    ஒரு நேரத்தில் ஒரு விலங்கு மட்டும் பலியிடப்படும்.

•    வேள்வி முடிந்ததன் பின்னர் கொட்டகைகளும் துப்பரவு செய்யப்படும்.

•    ஒரு விலங்கை பலியிடக்கொண்டுவரும்போது அங்கு வெட்டிய விலங்கு உடல் எதுவும் இருக்கமாட்டாது.

இதனையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம், ஜூலை 21 வரை ஒத்திவைத்தது.

You May Also Like

  Comments - 0

  • mohanarajan Thursday, 03 July 2014 05:40 AM

    கொலை செய்வதற்கு சிலருக்கு நன்றாக தெரியும்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .