2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொது பல சேனாவுக்கும் கோட்டாவுக்கும் தொடர்பில்லை: இராணுவம்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனாவிற்கும் (பி.பி.எஸ்), பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்  செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன மற்றும் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புகள் இருக்கின்றன. ஜனநாயக நாட்டில் ஏனையோருக்கு இடையூறு ஏற்படுத்தாதவகையில்  செயற்படோம்.  மாத்தறையில் நிர்மாணிக்கப்பட்ட ஆன்மீக நிலையத்தை திறப்பதற்கே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 2013ஆம் ஆண்டு மார்ச் 09ஆம் திகதி அங்கு சென்றார்.

பொதுபல சேனா அமைப்புக்கு, பாதுகாப்புச் செயலாளர் அனுசரணை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டிலும் எந்த உண்மையுமில்லை. அன்றைய திறப்பு விழாவுக்கு பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசேர தேரருக்கும் விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கலாம்.

வண. விமலஜோதி தேரர் அழைப்பு விடுத்தமை காரணமாகவே அந்த நிலையத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திறந்துவைத்தார். அங்கு பிடிக்கப்பட்ட படத்தை வைத்தே பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் பொதுபல சேனாவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஓர் எண்ணத்தை பரப்புவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0

  • tamilan Thursday, 03 July 2014 05:24 AM

    ஆஹா....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .