2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.தே.க.,ஜே.வி.பிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Kanagaraj   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி) யைச்சேர்ந்த 28 பேருக்கு எதிராக 15 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் கடும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010 ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பொலநறுவையில் அமைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
பொலநறுவை மேல் நீதிமன்றத்திலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் பிடினி ஜயரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.கே.சுபசிங்க, ஆர்.கே.இந்திரானந்த சில்வா உள்ளி 28 பேருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாட்சியாளர் பட்டியலில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரதான சாட்சியாளராக உள்ளடக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .