2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மொழிப்பிரச்சினையே விரிசலை ஏற்படுத்தியது: பிரதியமைச்சர்

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே  குடும்பமாக இருந்த எம்மத்தியில் 1956 ஆம் ஆண்டு மொழிப்பிரச்சினையே விரிசலை ஏற்படுத்தியது என்று விவசாய பிரதி அமைச்சர் வை.ஜி. பத்மசிறி கவலை தெரிவித்தார்.

முன்னாள் ஐ.நா. நிபுணர் துரைசுவாமி குமரன் தங்கராஜாவின் கருத்துரைத் தொனிப்பொருளான 'வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரம்பரிய சிற்றளவு விவசாய அறிவுசார் தொழில் முயற்சி' மீதான பயிற்சிப்பட்டறை  ஹெக்டர் கொப்பேகடுவ வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் ஆரம்ப வைபவம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கஷ்னிக்கா ஹிரிம்பூரிகம தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவினால் வடமாகாண விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை தொடக்க விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யாழ்.விவசாயிகள் பல்வேறு துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கடந்த காலத்தில் தங்களுடைய உறவுகளை, வீடு வாசல்களை மற்றும் உற்பத்தித்துறையை இழந்தார்கள். 

இன்று யுத்தம் ஓய்ந்துவிட்டது. நாம் எங்களுடைய பிரதேசங்களை எங்களுடைய மக்களை மீண்டும் கட்டியெழுப்பவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இன்றைய யுகத்தின் தேவை அடிமட்டத்திலுள்ள மக்கள் அறிவுபெறவேண்டும். தங்களுடைய உற்பத்தி சாதனைகளில் முன்னேறவேண்டும்.
எனக்கு ஒரு முக்கியமான சம்பவம்; ஞாபகத்திற்கு வருகிறது. என்.எம்.பெரெரா 1936 ஆம் ஆண்டு அன்றைய சபாநாயகராக திரு. வைத்திலிங்கம் துறைசுவாமியை பிரேரித்தார். பிலிப் குணவர்த்தன அதனை வழிமொழிந்தார். ஒரு சிங்கள நண்பரினால் அப்பெயர் முன்மொழியப்பட்டது. அன்றைய சபாநாயகராக வைத்திலிங்கம் துரைசுவாமி தான் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு கொடூரமான யுத்தம் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கில் வாழக்கூடிய மக்கள் கூடுதலான வேதனைகளை அனுபவித்தார்கள். பல எண்ணிக்கையானவர்கள்; விதவைகளாக இருக்கின்றார்கள். வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்கள் இருக்கின்றார்கள். ஏதோ ஒருவகையில் எங்களுடைய வாழ்க்கையை நாங்களே   முன்னெடுத்துச்செல்லவேண்டியவர்களாக இருக்கி;றோம். ஓர் இயல்புநிலை வாழ்க்கையை புதிதாக உருவாக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.; வறுமையை ஒழிக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

வடமாகாண விவசாயிகள் நடைமுறை விவசாயத்தில்   ; ஏற்பட்டிருக்கும் வறுமைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. விவசாயத்துறையில்; முன்னேற விவசாயிகள் விஞ்ஞான ரீதியிலான அறிவை கட்டாயம் பெறவேண்டும்.

30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய கல்விமான்கள் மத்தியில் சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழர் என்ற பேதம் இருக்கவில்லை. எல்லோரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம்.

ஆனால், 1956 ஆம் ஆண்டில் மொழிப் பிரச்சினை காரணமாக எங்கள் மத்தியில் விரிசல் ஏற்பட்டது. இன்று அந்த நிலைமையில் ஒரு மாற்றம் கண்டிருக்கின்றோம்.

1936 ஆம் ஆண்டு முதல் அரச சட்ட சபையிலிருந்து சிங்களம், தமிழ் இந்த நாட்டின் அரச கருமமொழியாக இருக்கவேண்டும் என்ற குரல் ஒலித்தது.

ஆனால், துரதிஷ்டவசமாக 1956 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக சிங்களம் மாத்திரம் அரச கரும மொழியானது. இந்த நிலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு இப்போது சிங்களமும் தமிழும் இந்த நாட்டின் அரச கரும மொழியாக இருக்கின்றன.

ஆகவே இந்த வரலாற்றை பின்னோக்கி பார்க்கின்றபோது இன்றைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும். பொருளாதார ரீதியான கஷ்டங்களை பொருத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழக்கூடிய தமிழ்பேசும் மக்களுக்கு மாத்திரம் தான் பொருளாதார கஷ்டங்கள் உண்டு என்று  சொல்ல முடியாது.

இலங்கையில், ஏனைய பகுதிகளில் வாழும் சிங்கள மக்களுக்கும் இந்த கஷ்டங்கள் இருக்கின்றன. ஆகவே இந்த கஷ்டங்களிலிருந்து; மீளவேண்டுமாயின் எங்களுடைய விவசாய அறிவை, விஞ்ஞான அறிவை நாம் முன்னேற்றவேண்டும் என்றார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .