2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'புலித்தடை நீக்கம் அரசியல் தீர்மானம் அல்ல'

Thipaan   / 2014 ஒக்டோபர் 21 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கும் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானம் அல்ல என்றும் அது நீதிமன்றம் ஒன்றின் சட்டரீதியான தீர்ப்பு எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு தீர்ப்பளித்தாலும் புலிகளின் நிதி மீதான முடக்கம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இருக்கும் என்றும் தீர்பளித்துள்ளது.

சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான வேறாக்கம் என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும் என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பத்திரிகை மற்றும் தகவல் அலுவலகம் அறிவித்துள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X