2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி தேர்தல் விவகாரம்: ஐ.தே.க., ம.வி.மு ஆணையாளரிடம் எடுத்துரைப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரதிநிதிகள், ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து கலந்துரையாடினர்.

திகதியை அறிவிக்கவும்: ஐ.தே.க.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக்கட்சி பிரதிநிதிகள், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறான யூகங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் திகதியை அறிவிக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையது என்பதனால் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டனர்.

முன்கூட்டியே வேண்டாம்:  ம.வி.மு.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவித்தல் விடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்பதனால் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .