2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீரியாவத்தை மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்படும்: விமல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கொஸ்லந்த, மீரியாவத்தை கிராமங்களில் பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பான இடத்தில் மீள நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச, உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தின் பொறியியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பதுளை மாவட்டக் காரியாலய அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு சேதமடைந்த வீடுகள் பற்றிய கணக்கெடுப்புக்களை எடுத்து வருகின்றது. அத்துடன் வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக பரிசீPலீக்கப்பட்டு இயற்கை அணர்த்தமில்லாத, பாதுகாப்பான அரச காணிகளை அடையாளம் கண்டு பரிசீலிக்குமாறும் அமைச்சர் விமல் வீரவன்ச பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இம்மக்களுக்கான தற்காலிக வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லயன் அறைகள் அடங்கிய 70 வீடுகள் 3 சனசமுக நிலையம், பாலர் பாடசாலை, கோவில் மற்றும் அடிப்படை வசதிகளும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிர், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .