2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2014இல் ஐ.தே.க ஆட்சியமைக்கும்: ரணில்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 03 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • jesmin Thursday, 03 January 2013 04:54 PM

    ரணில் ஐயா நீங்கள் தலைமைப் பதவியில் இருக்கும் வரைக்கும் உங்கள் கட்சி எதிர்க் கட்சியில்தான் தொடர்ந்து இருந்து புதிய உலக சாதனையை நிலைநாட்டும். பகல் கனவு காணாதீர்கள். உங்களைப் போன்றவர்கள் இருப்பதையே விரும்புவர்.

    Reply : 0       0

    Kumar Friday, 04 January 2013 03:08 AM

    அப்படி ஐ.தே.கட்சி ஆட்சி அமைத்தால் நல்லது ஆனால் எத்தனை உங்களுக்கு வோட்டு போடுவார்கள் உங்கள் கட்சியிக்குள் உள் புசல்கள் ரணில்சஜித் என்று தொடர்ந்தும் மக்களை ஏமாத்த முடியாது

    Reply : 0       0

    siddeek Friday, 04 January 2013 06:37 AM

    எல்லா எதிர் கட்சிட்தலைவர்கலும் ஒரு தேர்தலுக்கு முன் இப்படித்தான் ஜோதிடர்கல் போல் ஆருடம் கூருவார்கல் அதிலும் யூ.என்.பி. தலைவர் ஒவ்வொரு தேர் தலிலும் இப்படித்தான் குரி சொல்லுவார் அது ஆலும் தரப்புக்கு பலித்துவிடும் .எனெவே ஒன்ரும் பேசாமல் இருந்து கட்ஷிக்குல் பூசல் இல்லாமல் ஒட்ருமயய் பாதுகாத்தால் ஒரு வேலை இவர்கானும் கனவு நனவாகலாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .