2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜயந்த தனபால, அல்-ஹூசைனுக்கு விளக்கம்

Kanagaraj   / 2015 ஜனவரி 30 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஜயந்த தனபால புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் அரசாங்கத்தினதும் கொள்கைகள் பற்றி மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்ஹூசைனுக்கு விளக்கமளித்தார்.


தனபால, மனித உரிமை பேவையின் தலைவர் ஜோக்கிம் றூக்கர் உட்பட பேரவையின் சகல அங்கத்தவர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.


தனது பயணத்தை நோட்டம் விடும் வகையிலானது என்று குறிப்பிட்டுள்ள தனபால, உயர் ஸ்தானிகளுடனும் மனித உரிமைகள் பேரவையுடனும் தேர்தல் விஞ்ஞானம் மற்றும் 100 நாட்கள் வேலைத்திட்டங்களில் கூறப்பட்டதற்கு அமைய ஆக்கபூர்வமான கூட்டுச்செயற்பாட்டை விரும்புவதாக கூறினார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்பாக இரு பக்கமும் சம்மதித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .