2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆடை தொழிற்சாலைகளின் ஊழலும் வெளிவந்தது

Gavitha   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாரிய ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டுச்சபையினால் அனுமதிப்பெற்ற 2 ஆடை தொழிற்சாலைகள் கடந்த வருடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கொள்கலன்களை வரி செலுத்தாது இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடைகளின் இறுதி தயாரிப்புகளுக்காக, மூலப்பொருட்களான துணிகள், புதிய ஆடைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் புலனாய்வுப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேலும் முதலீட்டு சபையினால் அனுமதிபெற்ற குருநாகலையில் அமைந்துள்ள இரண்டு ஆடைதொழிற்சாலைகள், இறக்குமதி செய்த ஆடைகளை மீண்டும் உரிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றும் அந்த ஆடைகள் அனைத்தும் இலங்கையின் பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .