2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதி - பிள்ளையான் சந்திப்பு

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 07 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு - விஜயராம வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் புஸ்பகுமார் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் தற்கால, எதிர்காலங்களில் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன், பிரதித்தலைவர் யோகவேள், செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலானா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் புஸ்பகுமார் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .