2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.ம.சு.கூ.வுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அமீர் அலி

Gavitha   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அமீர் அலி வாபஸ் பெற்றுக்கொண்டார்.


இந்த மனு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர்களான சரத் டி அப்ரிவ், அனில் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.


இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுனில் பிரேமஜயந்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல். எஸ் ஹமீ;ட், தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரே குறிப்பிடப்பட்டிருந்தனர்.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அமீர் அலி, அப்பதவியிலிருந்து பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.


இதனை எதிர்த்தே, அமீர் அலி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர், 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


எனினும், அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு டிசெம்பர் 24ஆம் திகதி தீர்மானித்தது.


இதனையடுத்தே, ஐ.ம.சு.கூ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு ஐ.ம.சு.கூ செயலாளர் நாயகம், அறிவித்திருந்தார். இதற்கு எதிராகவே நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, மனுத்தாக்கல் செய்திருந்தார்.


அந்த மனுவையே அவர்,நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .