2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சி.ஐ.டீ.யினர், தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் துரத்துகின்றனர்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

வன்னி மாவட்டத்தில் நான், மக்கள் சந்திப்புகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் அங்கு இரகசிய பொலிஸார் சென்றுவிடுகின்றனர் நான், பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாவற்றுக்கும் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் முந்திகொண்டு சென்றுவிடுகின்றனர். அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் என்னை துரத்துகின்றனர் என்று கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா தேக்கவத்தையிலுள்ள ஐக்கிய தேசிய கூட்டணியின்; காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வடக்கு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனைபோல மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைவதற்கு பிரதான காரணம் பொதுபலசேனா அமைப்பு மற்றும் அதனை போல இனவாத அமைப்புகளை இணைத்துக்கொண்டு இனவாத பிரசாரத்தை முன்னெடுத்த போது அதற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை.

அதனைபோலவே, வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு இல்லை என எமக்கு தெரிந்தபோது, ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபல சேனா அமைப்பு ஆதரவு வழங்குவதாக கூறியபோது, எமக்கு அங்கிருக்க முடியாது என தோன்றியது.

இதன்காரணமாக நாம், மஹிந்தவை விட்டு மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்ததுடன் மைத்திரிபால சிறிசேன  ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து அவரது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுக்கும் நாட்டில் எனைய பிரசேதங்களில் உள்ள மக்களும் நிறைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

இப்போது எனக்கான வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்போகின்றது. ஏனென்றால்,  நான் பங்கேற்கும் மக்கள் சந்திப்புகளின்போது தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரகசிய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வந்து கூட்டங்களில் அமர்கின்றனர். அவர்கள் ஏன் வருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் அதில் எனக்கு மகிழ்ச்சிதான் ஏனென்றால், எனது கூட்டங்களில் வந்து அமரும் இவர்கள் எனது பேச்சை கேட்டு கேட்டு சிலவேளை, எனது பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்து எனது வாக்காளர்களாக மாறி எனக்கு வாக்களிக்கக்கூடும்.

ஐக்கிய தேசிய முன்னணி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் 120 ஆசனங்களைவிட அதிகமான ஆசனங்களை பெற்றுக்கொண்டு அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில்  பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பார். அவரைதவிர வேறு யாரும் இல்லை. இந்த தேர்தலில் சகல இவாத கருத்துகளும் உடைக்கப்பட வேண்டும். தமிழ், சிஙகள, முஸ்லிம் என பிரித்துபார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் அப்போதுதான் இனவாதத்தை தோல்வியடைசெய்ய முடியும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0

  • சமூன். Tuesday, 04 August 2015 02:11 PM

    ரங்காவும் நாமலும் செய்த புன்னியத்தில மயிலும் ஆடுது ! கூடவே தலைவரிடமுள்ள மயில் மக்களுக்கு பாயும் என்றதினால்தான் அதிகாரிகள் முன்கூட்டி ஆஜராகின்றனர். இதுகூட தெரியாத தலை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X