2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இனவாதத்தை தூண்டி வாக்குகளைப் பெற கூட்டமைப்பு சதி: ஜே.வி.பி

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- யொஹான் பெரேரா

தங்களது குறைகளை மறைத்துக்கொள்வதற்காக மீண்டுமொருமுறை இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதன்மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளைக் குவித்துக்கொள்ளும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியது. 

அத்துடன், கூட்டமைப்பினரின் சமஷ்டிக் கோரிக்கையை கடுமையாகச் சாடிய ஜே.வி.பி, ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த சமஷ்டிக் கோரிக்கையை முன்வைப்பதன் மூலம், சிங்கள கடும் போக்காளர்களை உசுப்பேற்றி தேவையில்லாத பதற்றத்தை அக்கட்சியினர் தோற்றுவிக்கின்றனர் என்றும் கூறியது. 

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, 'வட மாகாண சபையினூடாக மக்களுக்கு எதையுமே கூட்டமைப்பினர், மக்களிடம் கூற எதுவும் இல்லாத நிலையில் சமஷ்டி பற்றி பேசுவதாகவும் நாட்டை பிரிக்கும் முயற்சியை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கும்' என்றும் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், 'நாட்டின் இப்போதைய தேவை இன, மத, ஜாதி வேறுபாடு இல்லாது சகலரும் சமத்துவத்துடன், சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்வதே ஆகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அரசாங்க ஊழியர்களை ஐ.தே.க.வும் ஐ.ம.சு.கூ.மும் ஏமாற்ற முயல்வதாக அவர் கூறினார்.

'இதேவேளை, இருமுறை ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்க ஊழியர்களுக்கு அப்போது செய்யாததை, இனி செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். 2002இல் சுயவிருப்பு  இளைப்பாறும் முறையை கொண்டுவந்து அரச சேவையை கீழ்மைப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது' என்றும் டில்வின் சில்வா கூறினார். 

'அரசாங்க ஊழியர்கள் வெளிநாடு சென்று  உழைக்கவோ அல்லது சுயதொழில் தொடங்கவோ சம்பளமில்லாத 5 வருட விடுமுறையை வழங்கப்போவதாக கூறியுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, அரசாங்கத்தை பாழாக்கப்போகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. போதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால், அரசாங்க ஊழியர்களுக்காக பல உரிமைகளை வழங்குவதற்கு ஜே.வி.பி.யினர் நடவடிக்கை எடுப்பர்' டில்வின் சில்வா மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X