2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திஸ்ஸவுக்கு எதிரான வழக்கு: சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், கொழும்பு கோட்டை பிரதான நீதவான் பிரியந்த லியனகேயின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கியிருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக கூறி, போலியான ஆவணத்தை தயாரித்து அதில் போலியான கையெழுத்துகளை இட்டார் என்று திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .