2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கூட்டமைப்பை சுசில் காட்டிக்கொடுத்துவிட்டார்: தே.சு.மு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்யவேண்டிய தேசியப் பட்டியல் விவரங்களை ஏற்கெனவே அறிவித்திருந்த போதிலும், கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஐ.ம.சு.கூவை காட்டிக்கொடுத்துவிட்டார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவருமான பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.

அபயாராமவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சுசில் பிரேமஜயந்த செய்தது, வரலாற்றில் பெரிய காட்டிக்கொடுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேசியப் பட்டியல் எம்.பி.பதவிகளை களவெடுத்தமைக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

'கூட்டமைப்பின் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரமேஜயந்த நீக்கப்பட்டுவிட்டதாக காலையில் கடிதத்தை விஷ்வ வர்ணபால கடிதத்தை அனுப்புகிறார். அவ்வாறு நீக்கப்பட்டதாக கூறப்படும் சுசில் பிரேமஜயந்த,  கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு மாலையில் அனுப்புகிறார்' என்றும் அவர் கூறுகின்றார்.

பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ஸ்ரீ லங்கா கொம்னியூஸ்ட் கட்சியைச்சேர்ந்த டியூ குணசேகரவை தேசியப் பட்டியலில் நியக்கமிக்காமல் விட்டுவிட்டனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

கேள்வி: தேசியப் பட்டியலில் எம்.பி.க்களாக தேர்தல்கள் ஆணையாளரால் நியமிக்கப்படுவோருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சவாலுக்கு உட்படுத்த முடியாது அல்லவா?

பதில்: அது தொடர்பில் எங்களுக்கு தெரியாது. நாங்கள் சட்டத்தரணியின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுவோம்.

கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தோல்வியடைந்தோருக்கு தேசியப் பட்டியல் ஊடாக எம்.பி.யாக நியமனம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?

பதில்: இல்லை. அதற்கு நேரம் இருக்கவில்லை.

கேள்வி: இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தினீர்களா?

பதில்:அவருக்கு எதுவும் செய்வதற்கு அதிகாரம் இல்லை.

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷ, பிரதம வேட்பாளராக களமிறங்கி தேர்தல் நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கினார். உங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து அவர் ஏதும் செய்யவில்லையா?

பதில்: அவர், எந்நாளும் எங்களுடன் இருக்கின்றார்.

கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கபடுமா, இல்லையா?

பதில்: அது தொடர்பில் நாளை தெளிவுப்படுத்துவோம்.

கேள்வி:எதிர்க் கட்சித் தலைவர் யார்?

பதில்:அதுதொடர்பிலும் எங்களுக்கு தெரியாது. நாங்கள் சட்ட ஆலோசனையின் பிரகாரமே செயற்படுகின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X