2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

8ஆவது நாடாளுமன்றத்துக்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

George   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

8ஆவது நாடாளுமன்றத்துக்கான முதலாவது அமர்வுக்கு திகதி நிர்ணயிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டளைக்கு அமைய, இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி காலை 9.30 மணிக்கு சபை கூடவுள்ளது.

இதேவேளை, மங்கள சமரவீர, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டீ.எம்.சுவாமிநாதன் ஆகியோர், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .