2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தகனசாலை ஊழியர்களால் சடலங்களுக்கு மௌசு கூடியது

Gavitha   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டை பொது மயானத்தின் தகனச்சாலையை மூடிவிட்டு அதன் பணியாளர்கள் இருவரும் பிரதேச சபையின் ஊழியர்களுடன் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டதால் மூன்று சடலங்களை எரிப்பதற்காக அதிக கட்டணம் செலுத்தி வேறொரு தகனச்சாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பெந்தோட்டை மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய 4,500 ரூபாய் செலவாகும் நிலையில் மற்றைய தகனசாலைகளில் சடலத்தை தகனம் செய்ய 7,500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளர்.

நலன்புரி சங்கங்களின் வருடாந்த சுற்றுலாப் பயணம், கடந்த 26ஆம் 27ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதுடன் இந்த சுற்றுலா பயணத்தில் சகல ஊழியர்களும் கலந்து கொண்டதாக பெந்தோட்டை பிரதேச சபையின் செயலாளர் சுரங்கி தேசப்பிரிய கூறியுள்ளார்.

வருடாந்தம் இடம்பெறும் இந்த விநோத களியாட்ட சுற்றுலா, ஊழியர்களின் பொது சங்கங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்படுவதுடன் குறித்த மையானத்தில் அருகிலுள்ள பிரதேசங்களை இடம்பெறும் மரணங்களுக்கு உரிய சடலங்கள் தகனம் செய்யப்படுவதுடன் ஏனைய பிரதேசங்களிலிருந்து கொண்டு வரப்படும் சடலங்களை கரநகரந்தெனிய, எல்பிட்டிய,  அளுத்கம தகன மையங்களில் தகனம் செய்ய இணைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தகனச்சாலை பணியாளர்களுக்கு பதில் ஆட்களை ஒருபோதும் நியமிக்க முடியாது. சடலத்தை எரியூட்டுவதற்கு தேவையான காஸ், இதர உபகரணங்கள் பயன்பாடு தொடர்பில் பயிற்சி பெற்றவரையே நியமிக்கவேண்டும் என்றும் பிரதேச சபையின் செயலாளர் சுரங்கி தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X