2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தாஜுதீனை பின்தொடர்ந்த மர்ம வாகனம்?: விசாரணையை ஆரம்பித்தது சீ.ஐ.டீ

Gavitha   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை செய்யப்பட்டபோது, அவரது வாகனத்துக்குப் பின்னால், மற்றுமொரு வாகனம் பயணித்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாகவும் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், புதன்கிழமை (14) நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

   தாஜுதீன் கொலை வழக்கு விசாரணை, நேற்றுப் புதன்கிழமை, கொழும்பு மேலதிக நீதவான் ரசிக்க மல்லவாரச்சி முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த சீ.ஐ.டியினர், தாஜுதீன் கொலை செய்யப்பட்ட வேளை, அவரின் வாகனத்தின் பின்னால் மற்றொரு வாகனம் சென்றிருப்பது தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

அத்துடன், அந்த வாகனம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, நீதிமன்றில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த சீ.ஐ.டியினர் குறிப்பிட்டதுடன், தாஜுதீன் கொலை செய்யப்பட்ட வேளை, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சில தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளமை குறித்தும் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அநுர சேனாநாயக்க மற்றும் சுமித் பெரேரா ஆகிய இருவரையும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .