2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு எதிராக 22ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு தீர்வை வழங்கும்படியும் தேவையில்லாத ஆடம்பர செலவினங்களை நிறுத்தும்படியும் அரசாங்கத்துக்கு வலியுறுத்துவதற்காக இம்மாதம் 22ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்கு எதிரான அடிநிலை ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்யவிருப்பதாக தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று அறிவித்தது.

'எம்மால் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஆனால் எமது சம்பளம் மட்டும் அப்படியே இருக்கிறது' என்று உயர்ந்த வாழ்க்கைச் செலவுக்கு எதிரான தொழிலாளர் கூட்டமைப்பின் பிரதிநிதி சமந்த கோரளாரச்சி கூறினார்.

'இந்த நாட்டு மக்கள் வருந்திக்கொண்டுள்ளனர். ஆனால் ஆடம்பரமான கொண்டாட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்கள், அரசாங்க தரப்பினரின் ஆடம்பர வாழ்க்கை முறை என்பன குறையாமல் தொடர்கின்றன' என அவர் குறிப்பிட்டார்.

'ஒருவர் மாறி ஒருவரை குற்றஞ்சாட்டாமல் வாழ்க்கைச் செலவைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கம், அரசாங்கம் பற்றி தீர்மானம் எடுக்க முன் அரசாங்கம் வாழ்க்கைச் செலவு தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என கோறளாரச்சி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .