2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

24 மணிநேர சிவப்பு எச்சரிக்கை

Editorial   / 2017 மே 29 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால், நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாயம் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றுப் பிற்பகல் 1 மணி முதல் இன்று (29) பிற்பகல் 1 மணிவரையான 24 மணிநேரத்துக்கே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய ஏழு மாவட்டங்களுக்கே, இந்தச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் மழை பெய்யுமாயின், மண்சரிவு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதால், மலைச் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள், அங்கிருந்து வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ள மேற்படி நிறுவனம், இந்தச் சிவப்பு எச்சரிக்கை, இன்று பிற்பகல் 1 மணிவரை நடைமுறையில் இருக்குமென்றும் தெரிவித்தது.

இதன் பிரகாரம், மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் விவரங்கள் வருமாறு:

இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி, எலபாத்த, பெல்மடுளை, குருவிட்ட, எஹெலியகொட, கிரிஎல்ல, இம்புல்பே, கஹாவத்தை, கலவான, கொலொன்ன மற்றும் நிவித்திகல.
கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, தெரணியகல, யட்டியந்தோட்டை மற்றும் தெஹியோவிற்ற போன்ற பிரதேசங்கள்.

காலி மாவட்டத்தின் பத்தேகம, யக்கலமுல்ல, நெலுவ, தவலம, நியகம மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள்.

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, அகலவத்தை, வலல்லாவிட்ட மற்றும் பதுரளிய பிரதேச செயலகப் பகுதிகள்.

மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பஸ்கொட, பிட்டபெத்தர மற்றும் முலட்டியன போன்ற பிரதேசங்கள்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல மற்றும் கட்டுவான ஆகிய பிரதேசங்களும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளே பிரதேச செயலகப் பிரதேசமும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும், இந்தச் சிவப்பு எச்சரிக்கை வலயங்களுக்குள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .