2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சக்வித்தி ரணசிங்கவுக்கு எதிராக 2,900 முறைப்பாடுகள்; விசாரணைகள் தீவிரம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சக்வித்தி ரணசிங்க தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மீதான 2,900 முறைப்பாடுள் குறித்து விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சக்வித்தி ரணசிங்கவும் மனைவியும் நவகமுவ பிரதேசத்தில் உள்ள அவர்களது முன்னோரின் வீட்டுக்கு சென்ற போதே மிரிஹான பொலிஸ் குழுவினர் சிவில் பாதுகாப்பு குழுவினரின் உதவியுடன் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கைது செய்யப்படும் போது எவராலும் அடையாளம் காண முடியாதளவில் நீண்ட தாடியுடன் மாறு வேடம் பூண்டிருந்தார். சக்வித்தி ரணசிங்கவின் திடீர் தலைமறைவு காரணமாக அவரிடம் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பணத்தை இழந்துள்ளதாக  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்து சுமார் இரண்டு வருடங்களாகின்றன.

இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து தனது மனைவியுடன் நாடு திரும்பி ரஞ்சன் என பெயரை மாற்றிக் கொண்டு சிறிய வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார்.

நாடு திரும்பிய பின் தனது மனைவியுடன் வத்தளை பகுதியில் வாடகை வீடொன்றில் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .