2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாவாந்துறை சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றில் மேலும் 30 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

யாழ். நாவாந்துறையில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றநிலையை தொடர்ந்து படையினராலும் பொலிஸாராலும் அப்பகுதி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பழிவாங்கல்  நடவடிக்கைதொடர்பாக மேலும் 30  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏற்கெனவே 22 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணி எஸ்.எம்.எம். சம்சுதீனுக்கு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, நீதியரசர் பி.ஏ. ரட்ணாயக்க, ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முந்தைய மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையுடன் இம்மனுக்கள் தொடர்பான விசாரணையும் ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏ.சபாநாதன், ஆர்.பத்மநாதன், எஸ்.ராஜேஸ்வரன், வை. சிவகுமார், ஆர். தர்ஷன், ஏ. சார்ள்ஸ் அன்ரனி, ஏ. கிறிஸ்துராஜன், பி.பிரின்ஸ் லக்ஷ்மன், எஸ். டனிஸ்தன், ஈ. ஜீன்சன், ஜி.டபிள்யூ. ஜிம்பெனிஸ்டன், என். கிரிதரன், எம். மரியதாஸ், ஆர். மயில்வாகனம், ஆர். நிஷாந்தன், ஏ. ராஜநாயகம், எஸ். அன்ரனி, ஏ.எவ்.ராஜநாயகம், ஜோர்ஜ் நிரஞ்சன், போல் இமானுவல், எம். நிஜந்தன், ஜோன் பீற்றர் ராஜீவ், எம். கலிஸ்டன் ஆகியோரே இம்மனுக்களை தாக்கல் செய்தனர்.

11 மனுதாரர்கள் சார்பாக கே.எஸ்.ரத்னவேல் ஆஜரானார். 8 மனுதார்கள் சார்பாக பி.என். தம்பு ஆஜரானார். 6 மனுதார்கள் சார்பாக புவிதரன் ஆஜரானார். ஏனைய மனுதாரர்கள் சார்பாக புலஸ்தி ஹேவமான்ன, பாசிந்து சில்வா, சன்ஜீவ ரணவீர ஆகியோர் ஆஜராகினர்.

பாதுகாப்பு அமைச்சரும் இவ்வழக்கில் ஒரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் ஏற்கெனவே 22 மனுக்கள் சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா உடாக தாக்கல் செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .