2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 33 இளைஞர்கள் இலங்கை வந்தடைந்தனர்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 33பேர் அடங்கிய மற்றுமொரு இளைஞர் குழுவை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்திய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை, அக்குழு இலங்கை வந்தடைந்தது.

இந்நிலையில், கடந்த மூன்று தினங்களில் 93பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இலங்கை வந்தடைந்துள்ளனர் என்று இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

விசேட விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை இன்று வந்தடைந்த இவர்கள் 33பேரில் ஒருவர் மாத்திரம் சிலாபத்தைச் சேர்ந்தவர் என்றும் ஏனையோர், மாத்தறை மற்றும் திக்வெல்லை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், தென்பிராந்திய கடற்பிரப்பினூடாக சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களாவர். விமான அனுமதிப்பத்திரம், விஸா உள்ளிட்ட எந்தவொரு சட்டரீதியான அனுமதிப்பத்திரமும் இன்றி அவுஸ்திரேலியா சென்றுள்ள காரணத்தினால் இவர்களை அந்நாட்டு பெடரல் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இதனால், அவுஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் அகதிகளுக்காக சர்வதேச அமைப்பு ஆகியன வழங்கும் எந்தவொரு சலுகையினையும் இவர்களுக்கு வழங்க முடியாது எனவும் கூறியே அவர்களை நாடு கடத்த அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்ததாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாடு திரும்பிய மேற்படி குழுவினரை பொறுப்பேற்ற விமான நிலைய அதிகாரிகள், அவர்களை புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து அவர்கள், விசாரணைகளின் பின்னர் விமான நிலைய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .