2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புலிகளின் முன்னாள் பேராளிகள் 400 பேர் 29ஆம் திகதி விடுதலை

Super User   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                      (சந்துன் ஏ.ஜெயசேகர)

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேராளிகளில் மேலும் 400 பேர், செப்டெம்பர் 29ஆம் திகதி வவுனியாவில் விடுதலையாவார்கள். இவர்களோடு சேர்த்து இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் 3423 பேர் என சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் டி.யூ. குணசேகர தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகளின் முன்னாள் பேராளிகளில் 8057 பயனாளிகள் 12 பாதுகாப்பு புனர்வாழ்வு மையங்களில் பயிற்சி பெறுகின்றனர்.

இவர்களுக்கு புனர்வாழ்வின் போது ஆங்கிலம், மண் கிண்டும் இயந்திரம் இயக்குதல், ஆடைத் தொழில், பேக்கரி தொழில், பாலர் பாடசாலை ஆசிரியர் பயிற்சி என்பன வழங்கப்படுகிறது என அமைச்சர் குணசேகர தெரிவித்தார்.

29, 30 ஆம் திகதிகளில் தான் வடக்கிற்கு விஜயம் செய்வதாகவும், அத்துடன் வவுனியாவில் ஒரு புனர்வாழ்வு மையத்தை 30ஆம் திகதி திறந்துவைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மக்கள் புனர்வாழ்வு மையங்களில் இருப்போர் தொடர்பான விபரங்களை பெற கொழும்புக்கு வரத் தேவையில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் விதவையானோரில் விசேட கவனம் செலுத்தும், குறைந்த வருமானம் பெறும்  சமூகப் பிரிவினருக்காக, இலங்கையில் நிதிப்படுத்தப்படும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான நிதித்திட்டமொன்று 29ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வீட்டைத் திருத்த, வீட்டைக் கட்ட அல்லது சுயதொழில் தொடங்க 250,000 ரூபா கடன் பெறமுடியும். இவர்களை சொந்த காலில் நிற்க வைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் டி.யூ.குணசேகர கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X