2024 மார்ச் 28, வியாழக்கிழமை

40,000 சிவிலியன்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டனர்-ஐ.நா முன்னாள் பேச்சாளர்

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின்  முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஆ.பி.சி செய்திச்சேவைக்கு நேற்று வழங்கிய பேட்டியிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை அரசாங்கம் தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டியிருக்கும் கோர்டன் வைஸ், விடுதலைப் புலிகளும் கூட  தடுத்துவைத்திருந்த அப்பாவிப்  பொதுமக்களை தொடர்ச்சியாக கொலை செய்ததாகவும் குறிப்பிட்டார்.

நியூயோர்க்கிலுள்ள சென்றல் பார்க் போன்றதொரு பகுதியிலேயே 300,000 பொதுமக்களும், விடுதலைப் புலி உறுப்பினர்களும் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X