2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குற்றவியல் சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்குமாறு நளினி மனு

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்துவருகின்ற  நளினி, உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினியை அவரது வக்கீல் புகழேந்தியை சந்தித்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2001  ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 2,200 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நளினி உட்;பட பலர் சி.பி.ஐ. விசாரித்த காரணத்தால் விடுதலை செய்யப்படவில்லை.

நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த நிலையில் நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த பிரிவை நீக்கினால் சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மாநில அரசே விடுதலை செய்யலாம்.

ஆதனால் தான் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .