2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5 இந்தியர்கள் உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை

Gavitha   / 2014 ஒக்டோபர் 30 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் கடத்தலுடன் தொடர்புடைய வழக்கில், 8 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரணதண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

இந்திய பிரஜைகள் ஐவருக்கும் இலங்கை பிரஜைகள் மூவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 955.4 கிராம் ஹெரோய்னை கொண்டுவந்தனர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்த எண்மரும் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக, யாழ்ப்பாணம் மல்ஷhகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரித்தி பத்மன் சூரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தணி மாதவ தென்னக்கோன், அரசாங்கம், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர், வடக்கில் கலாசாரத்தை பாதுகாக்கவேண்டும். அந்த கஷhசாரத்துக்கு இடையூறNh பங்கமோ விளைவிக்க இடமளிக்ககூடாது. ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள எண்மரில் ஐந்துபேர் தமிழகத்தைச்சேர்ந்த மீனவர்கள். தமிழக மீனவர்கள், வடக்கின் கலாசாரத்தை சீர்குலைக்க முயல்கின்றனர் என்று சுட்டிக்காட்டியதுடன், 2கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தால் கூட அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதேவேளை, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, ஹெரோய்ன் கடத்தல் குற்றத்துக்கு 25 வருடங்கள் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கலாம். இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் எனக்கு எவ்விதமான ஆட்சேபணிம் இல்லை. ஆனால், இலங்கை-இந்திய உறவை கவனத்தில் கொண்டு தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்தே அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .