2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானிலிருந்து 5000 எருமைகளை இறக்குமதி செய்ய திட்டம்

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானிலிருந்து 3 வருடங்களுக்குள் 5,000 எருமை மாடுகளையும் 10 ஒட்டகங்களையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

500 எருமை மாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் இறக்குமதி செய்யப்பட்டு ஆரம்பத்தில், அரசாங்கத்தினால் நடத்தப்படும் பண்ணைகளில் வளர்க்கப்படும் எனவும் பின்னர் அவற்றின் கன்றுகள் ,கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும்  கால்நடைகள் அமைச்சின் செயலாளர் எச்.ஏ.கமகே தெரிவித்தார்.

இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழ் மேற்படி எருமை மாடுகள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறினார்.

தற்போது இலங்கை தனது பால் தேவையில் 20-25 சதவீதமானவற்றை மாத்திரமே உற்பத்தி செய்கிறது. இதை 40 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒட்டகப் பண்ணை குறித்து கேட்டபோது, பாகிஸ்தானில் ஏற்கெனவே ஒட்டங்களின் விலை விசாரிக்கப்பட்டுள்ளதாக கமகே கூறினார். 
பாகிஸ்தானிலிருந்து 3 லட்சம் ரூபாவுக்கு ஒட்டகங்களை வாங்க முடியும். ஆனால் இறக்குமதி செலவு உட்பட ஒட்டகமொன்றுக்கு 400,000 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • maasfak mohamed Tuesday, 25 January 2011 06:05 AM

    இங்குள்ள எருமைகள் போதாதா

    Reply : 0       0

    yarro oruvan Tuesday, 25 January 2011 05:31 PM

    பாகிஸ்தானின் எருமைகள் இங்கு வந்தால்,பாகிஸ்தானைப் போல் நமது நாட்டிலும் பிரச்சினைகள் உருவாகும் நிலை ஏற்படலாம்,தற்போது நமது நாட்டு எருமைகளின் தொல்லை தாங்க முடியாதுள்ளது.

    Reply : 0       0

    manidan Tuesday, 25 January 2011 05:55 PM

    பாகிஸ்தான் ஆட்சி போல் மாறிவிடும் நம் நாடு

    Reply : 0       0

    xlntgson Tuesday, 25 January 2011 08:50 PM

    எருமைகள் ஏன் இங்கு இல்லாமல் போய் விட்டன? அதே காரணத்துக்காக அந்த எருமைகளும் இல்லாமல் போகலாமல்லவா?
    மேலும் ஒட்டகப்பாலருந்தி ஒட்டக இறைச்சியை சாப்பிட்டால் பலதாரமணத்தையும் அனுமதிக்க வேண்டியது வருமோ?

    Reply : 0       0

    yarro oruvan Wednesday, 26 January 2011 12:47 AM

    xintgson ஒட்டகப் பால்,இறைச்சி இவற்றுக்கும் பலதார மணதுக்கும் என்ன சம்பந்தம்? தேவை இல்லாதவற்றை இங்கு குறிப்பிட வேண்டாம்.இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நிந்தித்து கருத்து தெரிவிக்கின்றீர்கள். அப்படி என்றால் ஒட்டகம் உள்ள எல்லா நாடுகளும் இதையா செய்கின்றார்கள்?

    Reply : 0       0

    xlntgson Wednesday, 26 January 2011 09:02 PM

    yarro oruvan, பெயர் அப்படி இருந்தாலும் நீங்கள் எனக்கு முக்கியமாகிவிட்டீர்கள், நான் தமிழ் மிரர் நண்பன் என்றுதான் சொல்ல வேண்டும், என்ன?
    ஒட்டகம் இருக்கும் நாடுகளில் எல்லாம் சட்டப்படியாக மறுமணம் அனுமதிக்கப்படவில்லை என்று நீங்கள் கூறினால் அது எந்த நாடு என்று சொல்ல முடியுமா?
    இது ஒரு புரதம் நிறைந்த 'சூடான' உணவு என்று பலர் குறிப்பிடுகின்றனரே அது ஏன்?
    'சூடு' என்பது எதைக்குறிக்கிறது?
    ஆங்கில ஊடகத்தில் கண்டேன் 'சூடு' ஒட்டகத்தை தாக்கினால் அதற்கு ஜோடி இல்லை என்றால் பெண்களை தாக்கி ஏறும் என்று?

    Reply : 0       0

    ramlan Thursday, 27 January 2011 01:08 AM

    ஏன் எருமைகளைப்போல் இவர்கள் சண்டை செய்கிறார்கள்.

    Reply : 0       0

    xlntgson Thursday, 27 January 2011 08:55 PM

    ramlan, நான் yaaro oruvanai, நண்பன் என்றேன். நாங்கள் இருவரும் தமிழ் மிரர் நண்பர்கள் என்றால் நீங்களும் நண்பர்தானே, என்ன!
    நண்பர்கள் எருமைகளாக இருந்தால் என்ன, ஒட்டகங்களாக இருந்தால் என்ன?
    நீங்கள் ஒட்டகமாக இருக்க விரும்புகின்றீர்களா, எருமையாக இருக்கவா?
    நான் எருமை, ஒட்டகத்துக்குப் போல் எனக்கு 'மதம்' பிடிக்காது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .