2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாலைத்தீவு மாணவிக்கு 5000 ரூபா தண்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 01 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 12 சிகரெட்டுக்களை வைத்திருந்தமைக்காக இலங்கையில் கல்விக்கற்று வரும் மாலைத்தீவு மாணவிக்கு கொழும்பு நீதிமன்றம் 5000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.

மேற்படி மாணவி கொழும்பு, 3 இல் உள்ள பெரிய கடையொன்றுக்கு அண்மையில் 12 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது,  இம் மாணவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி 'இப் பெண் சொந்த பாவனைக்காக தனது பையில் வைத்திருந்த சிகரெட்டுக்களையே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இவை சட்டவிரோத சிகரெட் அல்ல. இவர் இலங்கைக்கு வந்தபோது சுங்கப்பிரிவினர் இவரை இரண்டு சிகரெட் பெட்டிகளை எடுத்துவர அனுமதித்தனர்' என வாதிட்டார்.

இருப்பினும் தனது கட்சிக்காரர் குற்றத்தை ஒப்புகொள்ள தயாராக இருப்பதனால் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு அவர் நீதிமன்றில் கேட்டதற்கு இணங்க இவருக்கு நீதவான் 5000 ரூபா தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .