2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'6 மாதங்களில் தமிழர் பிரச்சினையை அரசு தீர்த்தால் அரசியலிருந்து ஒதுங்க தயார்'

Super User   / 2011 ஜூலை 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

"இனப்பிரச்சினை தொடர வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் விரும்பவில்லை. அரசாங்கம் தான் விரும்புகிறது. எங்கே உங்களால் முடிந்தால் இன்னும் ஆறே மாதங்களுக்குள் இந்த பிரச்சினையை தீர்ப்போம் என்று இந்த தேர்தலில் மக்களுக்கு வாக்களித்து அதனை நிறைவேற்றினால் நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபை பிரிவில் உள்ள குளத்தடி நாச்சிமார் கோயில் முன்றலில் நடந்த அரச நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன விடுத்த ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேர்தல் விதிமுறைகளை தெற்கின் சிங்கள அரசாங்கம் தான் ஏற்படுத்துகின்றன. அவற்றில் தமிழர்களின் பங்களிப்பு ஏதுமில்லை. ஆனால், இங்கே வந்து அந்த விதிமுறைகளை அமைச்சர்களாகிய நீங்கள் தான் அப்பட்டமாக மீறுகிறீர்கள்.

அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழுக்கம் பற்றி தனது ஒவ்வொரு பேச்சிலும் நாட்டுக்கு  போதிக்கிறார். ஆனால் அவரது சகோதரரான நீங்களோ தேர்தல் விதிமுறைகளை இங்கு அடியோடு மீறி அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்துகிறீர்கள்.

இப்படிச் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று எந்த மானமுள்ள தமிழ் கட்சியும் செயற்பட்டதில்லை. நாங்கள் அன்றும் இன்றும் என்றும் எமது மக்களின் உரிமைகள் பற்றி தான் பேசுகின்றNhம். அவற்றை கொடுப்பதற்கு நீங்கள் தான் தொடர்ந்து மறுத்து வருகிறீர்கள். அதன் மூலம் இனப்பிரச்சினை நீடிக்கிறீர்கள்.

தமிழர்களை மிக மோசமான பிரச்சைக்காரர் நிலைமைக்குள் பிடித்துத் தள்ளியது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தான். முள்ளி வாய்க்காலிலும் பின்னர் தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் பிடுங்கி பிச்சைக்காரர்கள் ஆக்கிய இந்த ஜனாதிபதியின் சகோதரர் தான் சொல்கிறார் பிச்சைக்காரன் தன் புண் ஆறாமல் பார்த்துக்கொள்வது போல சில அரசியல் கட்சிகளும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாமல் இருப்பதில் அக்கறையாக இருக்கிறார்கள் என்று.

ஜனாதிபதி நினைத்தால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்த 6 மாதங்களில் தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்க முடியும். உங்களால் அதனைச் செய்ய முடியுமா? நான் சவால் விடுகிறேன், நீங்கள் அப்படிச் செய்தால் அரசியலைவிட்டே நான் ஒதுங்குகிறேன்.

காலம் காலமாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கத் துணிவற்ற இனத்தின் அமைச்சராக இருந்து கொண்டு தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக குற்றஞ் சுமத்தாதீர்கள்.

அது உங்களுக்கு வெற்றியைப் பெற்று தராது. இறுதி போரில் உங்கள் படையினர் செய்தார்கள் என்று சொல்லப்படும் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும்படி உலகம் முழுவதும் கேட்கிறது.

நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நீதியை நிலைநிறுத்தும்படி உலகம் சொல்கிறது. ஆனால், நீங்கள் அது பற்றி எமது மக்கள் முன் எதுவும் வாயே திறக்கவில்லை.

போரில் கொல்லப்பட்டவர்களை கணக்கெடுக்கக்கூட இன்னும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கொன்றவர்களை அடையாளம் கண்டால் தானே கொலை செய்தவர்களை அடையாளம் காண முடியும். ஆனால் அவற்றை நீங்கள் தவிர்க்கிறீர்கள். ஏன் என்றால் பயம்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க இது வரை என்ன செய்திருக்கிறீர்கள். இங்கே தங்கள் உறவுகளை காணோம் என்று மனைவியரும் தாய்மாரும் பிள்ளைகளும் புலம்பி தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு தீர்வு சொல்வதற்கு வக்கற்ற உங்களால் எப்படி தமிழர்களுக்கு நீதியான தீர்வை முன்வைக்க முடியும்?

முதலில் நீங்கள் நேர்மையாக இருங்கள், அதன் பின்னர் மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டலாம். நாடாளுமன்ற தெரிவுக் குழு என்று காலத்தை இழுத்தடிக்காமல் தமிழர்களுக்கு என்ன தீர்வை கொடுப்பீர்கள் என்று இந்த  தேர்தலிலேயே மக்களுக்கு சொல்லுங்கள். அது முடியாது என்றால், இனிமேல் தமிழ் மக்களிடம் வராதீர்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Monday, 18 July 2011 03:54 AM

    அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்க்க மாட்டாது என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு தனது எம்பி பதவியை துறப்பதாக சவால் விடுத்துள்ளார் .சரிதானே ?

    Reply : 0       0

    Pasha Monday, 18 July 2011 03:04 PM

    தமிழன் வாழும் மட்டும் தமிழர் பிரச்சினை இருக்கும் சரவணன் அய்யாவுக்கு அது தெரியும்.

    Reply : 0       0

    aj Monday, 18 July 2011 07:07 PM

    @இப்னு முதலில் உங்கட பிரச்னையை பாருங்க. அங்கு நாறுகிறது. இவர்கள் கையில் தீர்வு இல்லை எதுமே **** கூட இல்லை.

    Reply : 0       0

    xlntgson Monday, 18 July 2011 09:09 PM

    எங்கட பிரச்சினை, ஒங்கட பிரச்சினை, எது எங்க எல்லாருடையும் பிரச்சினை?

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 19 July 2011 03:09 AM

    உண்மை உண்மையிலேயே கசப்பானதுதான். நாங்கள் எல்லா விடயங்களையும் சாதிஇ மத பேதங்களுக்கப்பால் நின்று இலங்கையர் என்ற பொது விமர்சனக் கண்ணோட்டத்தில்தான் கூறுகிறோம். ஆனால் சகல விடயங்களிலும் பிரிவினைஇ எங்களது என்ர கலாசாரத்தில் வளர்ந்த இ பயின்றவர்களுக்கு எதை செவிமடுதாலும் அதில் பேதைமை தான் தோன்று.ம் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை நான் சகோதரர்களாகவே மதிக்கிறேன். என்னை ஆளாக்கியது தமிழே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X