2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கும்

Super User   / 2010 நவம்பர் 04 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் முன் பலர் சாட்சியமளிக்கவுள்ளதால் அடுத்த ஆறு மாதங்களுக்கு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2002 முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சம்பவங்கள் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து அறிக்கையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம்  இந்த ஆணைக்குழுவை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X