2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

67ஆவது பட்ஜெட் இன்று 1.32க்கு சமர்ப்பிக்கப்படும்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், இன்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 1.32க்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது, இலங்கை அரசின்; 67ஆவதும் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 39ஆவதும் வரவு- செலவுத் திட்டமாகும்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, சமர்ப்பித்து உரையாற்றுவார்.

இது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 10ஆவது வரவு-செலவுத்திட்டமாகும். தடுத்து நிறுத்த முடியாத இலங்கை எனும் கருப்பொருளிலேயே இத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடும். பிரதான நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர், 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்.

வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் வாசிப்பு, நாளை 25ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 1ஆம் திகதி வரையிலும் 7 நாட்களுக்கு நடைபெறும்;. இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறும்.

வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் நவம்பர் 3ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 24ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசவிடுமுறை நாட்கள் தவிர 17 நாட்களுக்கு நடைபெறும்.

வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 24ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடத்தப்படும்.

வரவு-செலவுத்திட்டம் நிறைவடையும் வரை நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6மணிவரையும் நடைபெறும். குழுநிலை விவாதம் நடைபெறும் 17 நாட்களும் ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கான நேரம் ஒதுக்கப்படாது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதனால் இன்று சமர்பிக்கும் வரவு-செலவுத்திட்டத்தில் மக்களை கவர்ந்திலுக்கும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .