2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

7 பேர் விடுதலை: இன்று ஆளுநர் ஆலோசனை

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முக்கிய ஆலோசனையை இன்று நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடந்த இந்த ஆலோசனை 2 மணி நேரம் நடந்தது.

ஆலோசனையின் முடிவில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பரிந்துரை கடிதம் ஆளுநருக்கும் நேற்றே அனுப்பப்பட்டது.

ஆளுநர் எடுக்கும் முடிவுதான் இறுதி இதுகுறித்து ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். இதனால் ஆளுநர் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின்பே விடுதலைச் செய்வது நடக்கும்.

ஆளுநர் என்ன செய்வார் இதில் ஆளுநர் மூன்று விதமான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.

1. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று விடுதலை செய்வது (பொதுவாக மற்ற விஷயங்களில் ஆளுநர் அம்மாநில அரசின் பரிந்துரையை ஏற்பதே வழக்கம்).

2. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பது (இதுபோன்ற முடிவுகள் மிகவும் முக்கியமான சிக்கலான கோரிக்கையின் போது நடக்கும்).

3.எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது.

இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதில் காலம் தாழ்த்த போவதில்லை என்று கூறப்படுகிறது.

மேற்படி விவகாரம் குறித்து, ஆளுநரின் செயலாளர் புதுடெல்லி,  மத்திய அரசு அதிகாரிகளுடன் உரையாடி உள்ளார். இதனால், இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் இன்றே முக்கிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .