2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை -ஈராக் கூட்டாணைக்குழுவின் 7ஆவது மாநாடு இன்று கொழும்பில்

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கை-ஈராக் கூட்டாணைக்குழுவின் 7ஆவது மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் ஈராக்குக்கான ஏற்றுமதி மற்றும் இரு நாடுகளின் வர்த்தக உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

இக்கூட்டாணைக்குழுவின் 6ஆவது கூட்டத் தொடர் 2002ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈராக் நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி சபா அல் டீன் அல்சாபி நேற்று புதன்கிழமை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கையில் நான்கு நாள் தங்கவுள்ள இக்குழுவினர் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களை சந்திக்கவுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைத் தந்த 18 போ் கொண்ட தூதுக்குழுவினரை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் வரவேற்றார்.


You May Also Like

  Comments - 0

  • Rishi Thursday, 21 October 2010 03:58 PM

    why are you arranged this meeting mr rishard. you told this meeting about export meeting what is the connection bitween iraq and sri lanka? please i wont your answer mr rishard bathurdeen.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .