2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புகைத்தலினால் நாளொன்றுக்கு 75சதவீத மரணங்கள் சம்பவிக்கின்றன

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

புகைத்தல் காரணமாக நாளொன்றுக்கு 75 சதவீதமான மரணங்கள் சம்பவிக்கின்றன என சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

புகைத்தலினால் உண்டாகும் நோய்களின் காரணமாக அரசாங்கத்துக்கு 4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகின்றது எனவும்  புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைப்பதில் அரசாங்கம் மிகுந்த அக்கறையாக உள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.ஏ.டி.வன்னிநாயக்க தெரிவிக்கையில்,

ஒரு நாளில் சம்பவிக்கும் மரணங்களில் 75 சதவீதமானவை புகைத்தல் காரணமாகவே இடம்பெறுகின்றன. சிகரெட் பக்கற்றுக்களில் எச்சரிக்கை படங்களை பொறிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை கொண்டுவருவதற்கு இதுவே காரணமாகும்.

சித்திரங்கள் மூலமான எச்சரிக்கை, சிகரெட் பிடிப்போர் தொகையை கணிசமாக குறைக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அவுஸ்திரேலியா, பிறேஸில், கனடா, இந்தியா உட்பட 15 நாடுகளில் சித்திர எச்சரிக்கைகள் நல்ல பயனளித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலையை கட்டுப்படுத்துவதற்கான சமவாயத்தில் முதலாவதாக கையொப்பமிட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதன்படி இதில் கையொப்பமிட்ட நாடுகள், புகைத்தல் காரணமாக உண்டாகும் நோய்களை சித்திரிக்கும் எச்சரிக்கைகள் சிகரெட் பெட்டிகளில் பொறிக்க வேண்டும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .