2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆபாச இணையத்தளங்களில் தோன்றிய 83 பேரின் புகைப்படங்களை பத்திரிகைகளில் வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மல் சூரியகொட)

ஆபாச இணையத் தளங்களில் தோன்றிய இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் 83 முகங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு  பொலிஸ் தலைமையகத்தின் பொதுமக்கள் உறவு பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

ஆபாச இணையத்தளங்களில் தோன்றியவர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக  மேற்படி  நபர்களின் முகங்களை பத்திரிகைகளில் பிரிசுரிப்பதற்கு உத்தரவிடுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு கோரியிருந்தது.

ஆபாச இணையத்தளங்களில் தோன்றிய 80 பெண்களினதும் 3 ஆண்களினதும் புகைப்படங்களை தாம் எடுத்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

'ஆபாச இணையத் தளங்களிலிருந்து நாம் இப்படங்களை எடுத்தாலும் அந்நபர்கள் இருக்கும் இடம் பற்றி எமக்குத் தெரியாது. அதனால் அந்நபர்களின் புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலம்  அந்நபர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கிறோம்' என  சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • karan Thursday, 04 November 2010 10:17 PM

    மிக நன்று அதி கூடிய தண்டனை வழங்கவேண்டும்.

    Reply : 0       0

    Nifrees ismail lebbe Thursday, 04 November 2010 10:21 PM

    நல்ல தீர்மானம்
    படமே காட்டுகிறவங்களுக்கு வெட்கம் வேற கேட்குது

    Reply : 0       0

    xlntgson Friday, 05 November 2010 08:10 PM

    ஒருவருடைய புகைப்படத்தை வைத்து இன்னொருவர் செய்த வேலைகளினாலும் சிலர் பொய்யான பெயர்களை வழங்குவதனாலும் இப்போது தொழில்நுட்பவசதிகள் அதிகம் என்பதனாலும் ஒருவரது விருப்பம் இல்லாமலே அவரது புகைப்படத்தை/நிகழ்வுகளை ரகசிய கேமராக்களில் பதிவு செய்து விடமுடியும் என்பதனாலும் குடும்பத்தார், ஒரே முகதோற்றம் உடையவர்கள் atavism பாதிக்கப்படுவார்கள் என்பதனாலும் நான் இதை எதிர்க்கின்றேன்.

    Reply : 0       0

    xlntgson Thursday, 11 November 2010 09:23 PM

    'விஜய' பத்திரிகைகள் இவற்றை பிரசுரிக்க மறுத்துவிட்டமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
    இதை காவல்துறை இணையதளத்தில் மட்டுமே காணக்கூடியதாக இருக்க வேண்டும்.
    மனிதர்களை கோள் சொல்ல தூண்டுவதும் அடுத்தவரது அந்தரங்கங்களை தேடித்திரிய வைப்பதும் சிறிய விடயங்களை பெரிது படுத்துவதும் நமது கலாச்சாரத்துக்கு மட்டுமல்ல, எந்த கலாச்சாரத்துக்கும் பொருந்தாது.
    நான் நெஞ்சு சுத்தமானவன் மற்றவர் கதை எனக்கு தேவை இல்லை என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்.
    கொலைக்கு கூட சாட்சி இல்லாத நாட்டில்.
    இதற்கு சாட்சியாக வேண்டுமா?
    கேவலம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X