2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஒரு கிராம் ஹெரோயின் வைத்திருந்ததால் 9 வருடங்களை சிறையில் கழித்த பெண்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுசித ஆர்.பெர்னாண்டோ)

ஒரு கிராம் ஹெரோயினை வைத்திருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் 9 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சோக சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தந்தையில்லாத 3 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் தலைவியான சோமாவதி, கடந்த 2003ஆம் ஆண்டு மொரட்டுவை – பாணந்துரை நோக்கிப் பயணிக்கும் ரயிலில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதன்பின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளினால் மறக்கப்பட்ட இவர் கடந்த ஒன்பது வருடங்களை விசாரணை இன்றியே சிறையில் கழித்துவிட்டார்.

இவர் முறைப்படி விசாரிக்கப்பட்டிருந்தால் ஆகக்கூடியதாக இவருக்கு 7 வருட சிறைத்தண்டனைதான் கிடைத்திருக்கும். இவ்வாறான குற்றத்துக்கு ஆகக் குறைந்த தண்டனையாக 3 வருட சிறை தண்டனை கூட இவருக்கு கிடைத்திருக்கலாம்.

இந்நிலையில், சோமாவதி தனது நிலைமை குறித்து நீதியரசருக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து இவரது சோகக் கதை அம்பலமாகியிருந்தது. சிறை அதிகாரிகள் சோமாவதியை பிரதம நீதியரசர் ஆசோக டி சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

இதனையடுத்து, சோமாவதியை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு கட்டளையிட்ட பிரதம நீதியரசர், சோமாவதிக்கு இனிமேல் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்ல வாழ்க்கையில் ஈடுபடுமாறு புத்திமதி கூறி விடுவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 23 February 2011 09:01 PM

    ஆரம்பமே சரியில்லை-எல்லோரும் ஒன்றில் கவன ஈனமாக இருக்கின்றனர் அல்லது மேல் வருமானம் உள்ள வழக்குகளை மட்டுமே கவனிக்கின்றனர், பொலீசில் மட்டுமல்ல சிறையிலும் இது எல்லா மட்டங்களிலும் காணப்படுகிறது. யாரும் இதற்காக கவலைப் படுவதாக தெரியவில்லை. வழக்குகள் விசித்திரமான காரணங்களுக்கெல்லாம் தவணை போகின்றன. குற்றவாளி வீட்டுக்கு வருவதில்லை, குற்றவாளிக்கு சமன்ஸ் வழங்க நேரம் இல்லை,அழைப்பாணையை கொடுத்தார்களா இல்லையா என்ற அறிக்கையே வராமல் தவணை போடப்படுகின்றன பல வழக்குகள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X