2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்பாறையில் அடைமழை; 9,000 ஏக்கர் நெற்காணிகள் பாதிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட திடீர் அடைமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 9,000 ஏக்கர் நெற்காணிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், நேற்று மாலை பெய்த தொடர் அடைமழை காரணமாக அறுவடைக்கு தயாராகயிருந்த சுமார் 9 ஆயிரம் ஏக்கருக்கும்  அதிகமான நெற்காணிகள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை, கல்முனை விவசாய பகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் 1,769 ஏக்கர் காணிகள் செய்கை பண்ணப்பட்டிருந்தும் இதுவரை சுமார் 400 ஏக்கரே அறுவடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .