2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்று தேசிய பாதுகாப்பு தினம்; காலை 9.25 – 9.27 மணிவரை மௌன அஞ்சலி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பிரதான நிகழ்வு பதுளை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இதில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிடங்களில் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த மௌன அஞ்சலிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசதுறை, தனியார்துறை நிறுவனங்களையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி, இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து தாக்கிய 'சுனாமி' ஆழிப்பேரலை காரணமாக இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் சுமார் 280,000 பேர் பலியாகினர்.

இதனால், இலங்கையில் மாத்திரம் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .