2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’MCC ஒப்பந்தத்துக்கு ஒருபோதும் இடமில்லை’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது, சஜித் இதனைக் கூறியுள்ளார்.

பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .