2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யுத்தத்துக்கான அறைகூவல் – ஐ. அமெரிக்கா

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜனகன் முத்துக்குமார்

ஈராக்கிலுள்ள ஈரானிய ஆதரவுடைய போராளிகளை கடந்த வார இறுதியில் ஐக்கிய அமெரிக்கா தாக்கியபோது, தமது மூலோபாய கொள்கைக்கு கேடு விழைவிக்கும் ஒரு செயற்பாட்டையே மேற்கொண்டது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க சார்பு கொள்கைக்கான வீழ்ச்சி உடனடியாகவே வெளிப்பட்டிருந்தது. ஈரானிய சார்பு போராளிகள், ஈராக் தலைநகர் பக்தாத்திலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டனர். அது 1979 ஆம் ஆண்டில், ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில், ஐக்கிய அமெரிக்க இராஜதந்திர பணியை 444 நாள்கள் ஆக்கிரமித்ததை நினைவுபடுத்தும் காட்சிகளை நினைவுபடுத்தியிருந்ததது.

 

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் ஆட்சியை ஐக்கிய அமெரிக்கத் தலைமையிலான படைகள் கவிழ்த்த 17 ஆண்டுகளுக்குப் பின்னர், ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் இருப்பு முதல்முறை கேள்விக்குள்ளாக்கியது இந்த சந்தர்ப்பத்திலேயே ஆகும்.

வெகுஜன அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஈராக்கின் அரசியல் அமைப்பை தீவிரமாக மாற்றியமைக்கக் கோருகின்றன என்று அவர்கள் ஒரு கணத்தில் வந்தனர்.

ஐக்கிய அமெரிக்க தமது இராணுவ நடவடிக்கையை மீளப்பெறவேண்டும் என்ற கோஷமும், ஈரானிய பிராந்திய வல்லரசாக்கத்தின் செல்வாக்கும் குறித்த போராட்டத்தில் மய்யப்படுத்த்த்தப்பட்டிருந்தமை, ஈரான் ஐக்கிய அமெரிக்கா இடையில் ஏற்பட்டிருந்த நிழல் யுத்தம் ஒரு நேரடியான கள யுத்தத்ததை நோக்கி செல்வதை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. 

குறித்த போராட்டம் தொலைநோக்கு விளைவைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், குறித்த போராட்டம் சவூதி அரேபியா தன்னை பிராந்தியத்தின் ஒற்றை வல்லரசாக கட்டமைப்பத்தற்கு நேரடியான எதிர் அழுத்தங்களை காட்டவும், ஷியா இஸ்லாமிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு செயற்பாடாகவுமே குறித்த போராட்டத்தின் அடிப்படை விளங்கியிருந்தது.

சவுதி அரேபியா - ஈரான் பிராந்திய மோதலை பொறுத்தவரை, ஐக்கிய அமெரிக்க நட்பு நாடுகளின் ஆதரவு தொடர்ச்சியாக சவுதிக்கு கிடைத்தவண்ணமே இருந்தது. ஆயினும், அண்மைக் காலத்தில் மலேஷியா, துருக்கி, கட்டார் உள்ளிட்டநாடுகளோடான சவுதியின் உறவு சிக்கலான பாதையை அடைந்தது, சவுதியின் கொள்கைவகுப்பில் காட்டிலும் ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகிழக்குக்கான கொள்கை வகுப்பில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் 57ஐக் குழுவாகக் கொண்ட சவுதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்ட, சவுதி கட்டுப்பாட்டில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அதன் எல்லைக்கு வெளியே மலேஷியத் தலைநகர் கோலா லம்பூரில் நடந்த இஸ்லாமிய உச்சிமாநாட்டில் குறித்த சிக்கலான வெளிவிவகார அணுகுமுறைகள் வெகுவாகவே வெளிப்பட்டிருந்ததுடன், இறுதியில், உச்சிமாநாடு, சவுதி எதிர்ப்புத் தொகுதி எவ்வாறாக முஸ்லிம் உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்த தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்ற தோரணையில் முடிவுற்றமை, குறித்த உச்சிமாநாடு சவுதி தாண்டிய சர்வதேச - முஸ்லிம் பிரச்சனைகளை வெகுவாகவே முன்னிலைப்படுத்தியிருந்தது,  சவுதியின் பிராந்திய வல்லரசு தன்மையை வெகுவாகவே சிதைத்திருந்தது.

துருக்கிய முஸ்லிம்கள் மீதான சீனாவின் சிக்கலான - அதன் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் தொடரும் அடக்குமுறை, மியான்மாரில் ரோஹிங்கியாக்களின் அடக்குமுறை, அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குதல், சிரியா மற்றும் யேமனில் தொடரும் உள்நாட்டுப் போர்கள் சவுதியின் வெளிவிவகார கொள்கைகளுக்கு முரணாகும் விடையங்கள் குறித்த உச்சிமாநாட்டில் பேச்சுப்பொருளாய் இருந்திருந்தது. 

எனினும், குறித்த உச்சிமாநாடு வேறொரு பிரிவினையையும் வெளிச்சம் போட்டுக் கட்டியிருந்தது. அது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் என்பது ஒருபுறம் நட்பு நாடுகளாக இருக்க, மறுபுறம், துருக்கி மற்றும் மலேசியா உலகலாவரீதியில் மத மென்மையான போக்கை பயன்படுத்தி குறித்த இஸ்லாமிய கட்டமைப்பில் இருந்துகொண்டு தமது வெளிவிவாகர கொள்கைகளை இஸ்லாமிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளுடனும் தொடர்ச்சியாக வலுப்பெறவும் அதன் மூலம் தம்மை (குறிப்பாக துருக்கி) பிராந்திய முதன்மையாளராக காட்டவும் முனைப்புடன் இருக்கின்றது.

இவற்றின் மத்தியிலேயே ஐக்கிய அமெரிக்காவின் அண்மைய தாக்குதல் மத்தியகிழக்கின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஈராக்கிய இறையாண்மையை மீறுவதாகவே ஐக்கிய அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் பெரும்பாலும் அங்கிகரிக்கப்பட்டிருந்தமை, குறிப்பாக, சவூதி அரேபியாவின் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு அரசியல் அனுகூலத்தை கொடுத்துள்ளது. இதன் பிரதிபலிப்பாகவே ரஷ்யாவும் ஈரானும் ஐக்கிய அமெரிக்க இராணுவ தாக்குதலை உடனடியாக கண்டனம் செய்தமை பார்க்கப்படவேண்டியதாகும். மறுபுறம், ஐக்கிய அமெரிக்க நட்பு நாடுகள் இதுவரை அமைதியாக இருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், அனைத்து வெளிநாட்டு சக்திகளையும் திரும்பப் பெற வேண்டும் என்ற ஈராக்கிய பொதுக் கோரிக்கைகள் வலுப்பெறுகின்றமை, மற்றும் ஈரானிய சார்பு போராளிகள் பக்தாத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தை முற்றுகை முடிவுக்கு கொண்டுவந்தது என்பது, ஈராக்கிய நாடாளுமன்றம் ஐக்கிய அமெரிக்க படையை ஈராக்கில் இருந்து வெளியேற்ற உத்தரவாதம் அளித்தனர் பின்னரே ஆகும் என்ற ஒரு நிலைமை ஐக்கிய அமெரிக்காவின் மத்தியகிழக்கு கொள்கைக்கு விழுந்த முதல் அடியாகும்.

மறுபுறம்,  ஈரானிய சார்பு போராளிகள் ஈராக்கிய பாதுகாப்பு ஸ்தாபனத்துடன் நெருங்கிய உறவைக் காட்டியுள்ளதுடன், இது முதன்மையாக ஐக்கிய அமெரிக்கா நேரடியாகவே தனது அரசியல் மற்றும் இராணுவம் சார் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நாட்டில் எதிர்கொண்ட ஒரு சர்வதேச அரசியல் தாக்குதல் என்ற பின்னணியிலேயே அதன் பதிலீட்டு எதிர்ப்பு நடவடிக்கையாகவே ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் மூலம், ஈரானிய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலும் ஈரானின் மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவருமான குவாசிம் சொலெய்மானி கொல்லப்பட்டமை பார்க்கப்படவேண்டியதாகும்.

இது ஐக்கிய அமெரிக்க - ஈரான் இராணுவ மோதலுக்கு அண்மையில் வழிவகுக்குமாயின் அது ஒரு ஒட்டுமொத்த மத்தியகிழக்கு - குறிப்பாக ரஷ்யாவுடன் இணைந்த ஒரு பிராந்திய போரியலுக்கே வழிவகுக்கும் என்பதே இப்போதைய அச்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X