2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரு காரணங்களால், என்னை விடுதலை செய்யக் கோர விரும்பவில்லை: குமரன் பத்மநாதன்

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகம்-1 | பாகம்-2 | பாகம்-3 | பாகம்-4

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும் பிரபாகரனுக்குப் பின் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி.), சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம், ஓகஸ்ட் 28ஆம் திகதி அப்பத்திரிகையில் வெளியாகியது. அப்பாகத்தின் தமிழாக்கம் இது:-

கேள்வி : அண்மைக் காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். நன்றி.  இவ்விடயங்கள் தொடர்பாக புதிய விளக்கங்களை நீங்கள் தந்துள்ளீர்கள். ஆனால், இப்போது நான் சமகால நடப்புகள் பற்றி கேட்க விரும்புகிறேன்.

இந்த அரசாங்கத்துடனான , குறிப்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷவுடனான உங்கள் தொடர்புகள் பற்றி தொடங்க விரும்புகிறேன். நீங்கள் ஏற்கெனவே உங்களை கைது செய்தமை, பாதுகாப்பு செயலாளருடனான உங்கள் முதல் சந்திப்பு என்பன பற்றி கூறியிருக்கிறீர்கள். நீங்கள் இருவரும் நல்லதொரு உறவை பேணுகிறீர்கள். ஆனால், இதைப்பற்றி பல குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களின் ஒரு பகுதியும் உங்களிடையே இரகசியமான சந்தேகத்துகிடமான சில கூட்டுசெயற்பாடுகள் நடைபெறுவதாகக் குற்றஞ் சுமத்துகின்றனர். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

பதில் : நான் கூறுவது உண்மையானது. இது மிகவும் எளிமையான கதை... எமக்கிடையில் எந்தவிதமான உடன்பாடும் இல்லை. எம்மிடையே இர


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 30 August 2010 08:52 PM

    மிகவும் அர்த்த பூர்வமானது இவரது இந்த கூற்று, வெளியில் இருப்பதை விட பாதுகாப்பு அதே நேரம் அரசின் கௌரவ விருந்தாளி! (மகேந்திரன் எத்தனையோ பேர் இருக்கலாம் என்று நான் யூகமாகவே கூறினேன். அதுபோலவே மறுப்பும் வந்திருக்கிறது. எனக்கு பாராட்டு இல்லையா? சீர்திருத்த இளைஞர்களுக்கு ஆங்கிலம் படிப்பிக்க விரும்புகின்றேன் வாய்ப்பு இருக்கிறதா?) கேபி கூறுவதில் அநேகம் சிந்திக்க கூடியவை, கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தாலும் கூட.

    Reply : 0       0

    sethuraman Saturday, 04 September 2010 05:25 PM

    அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர் உண்மைகளை கூறிவிட முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X