2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழைமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் கடந்த 7ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜெய்ப்பூர் கலாசாரம் மற்றும் வீரம் கலந்த நகரம். ஜெய்ப்பூரி ன் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. இந்த நகரம் புராதன நகரங்கள் பட்டியலில் தெரிவானது மகிழ்ச்சி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற பெருமையை அஹமதாபாத் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .