2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிக்கும்?

Super User   / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(04.09.2010 ஆம் திகதி வெளிவந்த, டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.)

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எதிரணியுடன் இருந்துக் கொண்டே அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் தீர்மானித்தபின் அது மீண்டும் சிறு புயலின் மையமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஆகஸ்ட் 27 இல் அந்த கட்சியின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாமில் கூடியது. பல விவாதங்கள், கலந்துரையாடலின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட அங்கத்தவர்கள் 24 பேர் ஏகமனதானது எனக் கூறப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு வந்தனர்.

இந்தக் கூட்டத்தின் பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான 50 வயதான ரவூப் ஹக்கீம், ஊடகங்களை சந்தித்துப் பேசியபோது தமது கட்சி உத்தேசித்துள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கும், ஆனால் எதிரணியோடு தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான இதன் இந்த தீர்மானம் எதிரணியிரிடையே எதிர்பார்த்தவாறே கசப்புணர்வைத் தோற்றுவித்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியின் (யூ.என்.எவ்.) இன் இணை நிறுவுனர் என்பதுடன் அந்த எதிரணியின் உற்சாகமானஇ  முக்கியமான பங்காளராகவும் இருந்தது.

இந்த வருடம் ஏப்ரல் 08 ஆம் திகதிதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கண்டி, வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆறு இடங்களை வென்றது. எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரண்டு இடங்களை கொடுத்ததுடன் மொத்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்தத் தீர்மானம்பற்றி  ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்களில் பெருங் கசப்புணர்வு காணப்பட்டது. இது ஒரு அரசியல் துரோகமாக, முக்கியமாக பிரதான பங்காளிக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியினால் (யூ.என்.பி.) காணப்பட்டது.

முன்னரும் வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடங்கள் ஒதுக்கும் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி  வட்டாரங்களில் மனக்கசப்பு காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட முஸ்லிம் அங்கத்தவரான கண்டியை சேர்ந்த அப்துல் காதர், ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்த விடயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கவனம் செலுத்த மறுத்தமை அப்துல்காதரை தேர்தலின் பின் தனிவழி போக வைத்தது. இவர் விரைவில் அரசதரப்புக்கு முறையாக மாறவுள்ளதாக நம்பப்படுகிறது.

தேர்தல் முடிவடைந்தபின் தேசிய பட்டியலில் இடங்களை ஒதுக்குவதுபற்றி ஐக்கிய தேசிய முன்னணியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிறையவே காணப்பட்டன. தேசியப்பட்டியல் இடத்துக்கான பல கோரிக்கைகள் குவிந்தமையால் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார பீடம் திணறியது. ஆனால், எல்லோரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியமாயிற்று. இதனால் பல கசப்புகள் தோன்றின. அழுத்தங்கள் இருந்தபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி அந்த கட்சிக்கு இரண்டு இடங்களைக் கொடுத்தார்.

தீர்மானம்


You May Also Like

  Comments - 0

  • Rohan Tuesday, 07 September 2010 07:43 PM

    பாவம் ஹக்கீம்

    Reply : 0       0

    xlntgson Tuesday, 07 September 2010 09:44 PM

    அரசியல் வியாபாரம்! யாரும் எதிரி இல்லை. நண்பனும் இல்லை, நிரந்தரமாக இருப்பது நலன்கள். அதுவும் தலைமைத்துவ சுயநலன்கள். பிராயோகிக்க என்னும் சமயோசிதம் இது சந்தர்ப்பவாதம் அல்ல ராசிக்பரித் சொன்னதை போல ரவூப் ஹக்கீமும் சொல்லலாம் ' நான் அப்படியே தான் இருக்கின்றேன், கட்சிகள் தான் மாறுகின்றன.' வேறு என்னதான் செய்ய முடியும்? சும்மா இருக்கவும் முடியாது இன்னும் ஏழு வருடங்கள் இருக்கின்றனவே. என்னவாவது செய்யத்தான் இது. அடுத்த முறை வெற்றிலையில் போட்டியிட சுதந்திரக்கட்சி உறுப்பினராகவும் வேண்டியதிருக்கலாம், என்ன?

    Reply : 0       0

    raheem kuwait, Wednesday, 08 September 2010 08:22 AM

    leader s choice is the best.

    Reply : 0       0

    M. T. Abdulla Wednesday, 08 September 2010 04:11 PM

    இந்த உலகத்தில் உள்ள எவரையும் நம்பலாம். ஆனால் அரசியல்வாதிகளை நம்பக்கூடாது.

    Reply : 0       0

    Nifrees Tuesday, 14 September 2010 07:49 PM

    ஐ தே கா வின் உள்விவகாரம் தான் இந்த சாணக்கியத்துக்கான காரணம்

    Reply : 0       0

    xxx Saturday, 05 February 2011 11:10 PM

    மக்கள்தான் பாவம்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .