2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அடையாள அட்டைக்கு கட்டணம் அறவிடப்படும்

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் போது, அதற்கு கட்டணம் அறவிடப்படுமென, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

 

கட்டணங்கள் யாவும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

 

அவைத் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதன்முறையாக, தேசிய அடையாள அட்டையை பெறுபவர்கள், 100 ரூபாவை கட்டணமாகச் செலுத்தவேண்டும்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டையில் ஏதாவது மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமாயின் அதற்கு 250 ரூபாய் அறவிடப்படும்.  

அத்துடன், காலங்கடந்த தேசிய அடையாள அ​ட்டைக்குப் பதிலாக புதிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு 100 ரூபாய் அறவிடப்படும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .