2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் சுற்றாடல் மாநாடு

ஆர்.மகேஸ்வரி   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் பிர​தேசத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுற்றாடல் மாநாடு இடம்பெறவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி  சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் சுற்றாடல் பிரச்சினை அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலேயே அநுராதபுரத்தில் ஜனாதிபதியின் கீழ் இந்த சுற்றாடல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருடத்துக்கு 6 மாநாடுகள் நாட்டின் பல பிரதேசங்களில் முன்னெடுக்கபடுவதாகவும், சில பிரதேசங்களில் காணப்படும் சுற்றாடல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

3 மாகாணங்களைத் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் மூலம் நாட்டின் அபிவிருத்தி எவ்வளவு முக்கியமோ அதேப்போல் சுற்றாடல் பாதுகாப்பும் மிகவும் அத்தியாவசியம் என்றார்.

சுற்றாடலை பாதுகாப்பதன் ஊடாகவே நாம் முன்னோக்கி செல்ல முடியும். அதை விடுத்து சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதானது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் துரோகம் என்றார்.

ஜனாதிபதியின் கீழ் இந்த அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் விசேடமாக ஆறுகள், நீர்நிலைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

காடுகளை அழிப்பது குறைவடைந்துள்ளது. இதனால் வன விலங்குகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி சுற்றாடல் அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் இலங்கையில் 1 சதவீதமே காடழிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. அதேப்போல் சட்டவிரோத மணல் அகழ்வு, காடழிப்பு என்பன கட்டுபடுத்தப்பட்டுள்ளது.   வரலாற்றுடன் ஒப்பிடும் போது, மிகவும் குறைந்த வன அழிப்பே முன்னெடுக்கபடுகின்றது. அதேப்போல் நாட்டில் 32 சதவீத காடுகளை உருவாக்கவும் ஜனாதிபதி பரீஸ் மாநாட்டில் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கில் 62 சதவீதம் காடுகள் உருவாகியுள்ளதுடன்,  கம்பஹாவில் 1 சதவீதமும், கொழும்பில் 4 சதவீதமும் காடுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார். 

எனவே இவைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்தவும், மக்களை சுற்றாடல் மீது அக்கறைக் கொள்ளச் செய்யும் நோக்கிலேயே இந்த மாநாடு முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .