2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஆதாரத்துடன் நிரூபிப்பேன்’

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுத் தொடர்பில், நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தான் தெரிவித்த கருத்துகள் அனைத்தையும், உயர்நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

சட்டத்தரணியாக உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட, நேர்மையான சட்டத்தரணிகள் குழாமொன்றை, தான் ஏற்கெனவே கொண்டுள்ளாரென, அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சட்டத்தரணிகள் பற்றிய தனது பார்வையைத் தொடர்ந்து செலுத்திய பிரதியமைச்சர், அனைத்துச் சட்டத்தரணிகளும், தமது சேவைபெறுநர்களுக்கு, பற்றுச்சீட்டை வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்பட வேண்டுமெனக் கோரினார். “வைத்தியர்கள் உள்ளிட்ட பல தொழில்வாண்மையாளர்கள், தமது கட்டண அறவீட்டுக்கான பற்றுச்சீட்டுகளை வழங்குகின்றனர். தனியார்துறை ஊழியர்களுக்கும், சம்பளப் பற்றுச்சீட்டுக் கிடைக்கிறது. இந்த ஆவணங்கள், அவர்களுடைய மாதாந்த வருமானம் பற்றிய விவரங்களைத் தருகிறது.

“ஆகவே, அவ்வாறான பற்றுச்சீட்டுகளை, சட்டத்தரணிகளும் வழங்க வேண்டும். இதன்படி, அவர்களுடைய வருமானம் பற்றி அறிந்துகொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .