2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியக் கப்பல் பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை  துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் இருந்த அலுவலக சபை உறுப்பினர்கள் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரென, தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த கப்பலில் இருந்த நபரொருவருக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதையடுத்து,  கப்பலிலுள்ள அனைத்து அலுவலக சபையினருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்ட போது, 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

4,000 மெட்றிக்தொன் எரிபொருளை ஏற்றிய இந்தக் கப்பல், திருகோணமலைத் துறைமுகத்துக்குச் செல்வதற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத் தந்ததாகவும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்தக் கப்பலும் அதிலுள்ள பணியாளர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X