2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’இந்தியப் பெருங்கடலின் கேந்திர நிலையமாக இலங்கை மாறும்’

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக, இலங்கையை, இந்தியப் பெருங்கடலின் கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம், நேற்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பண்டைய காலத்தில் இலங்கை, இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்கிய போது, நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல  துறைமுகங்கள் காணப்பட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நினைவுபடுத்தினார்.

அத்துடன், இந்தியப் பெருங்கடலில் எதிர்கால வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கையின் போது, கொழும்புத் துறைமுகம் மற்றும் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் என்பவை விசேடமான இடத்தை பெற்றுக்கொள்ளும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை, தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, அலரி மாளிகையின் நேற்று (11) இடம்பெற்ற போதே, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, துறைமுக அபிவிருத்தியின் ஊடாக, சுயேஸ் கால்வாய் ஊடாக சிங்கப்பூர் வரை பயணிக்கும் கப்பல்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க முடிவதுடன், அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், 2050ஆம் ஆண்டாகும் போது, வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில் சனத்தொகை எண்ணிக்கை 3 பில்லியனை அண்மிக்கும் போது, இந்தத் துறைமுகத்தின் ஊடாக பாரிய பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அதன்போது, இலங்கையின் கிழக்கு நுழைவாயிலாக திருகோணமலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .